News August 16, 2024
திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இருகூர்-கோவை வடக்கு ரயில்வே நிலையத்திற்கு இடையே, தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கரூர் வழியாக திருச்சி-பாலக்காடு ரயில் (எண்-16843) நாளை முதல் 10 நாட்களுக்கு மட்டும் இருகூர் – போத்தனுார் வழியாக இயக்கப்படும். இதனால், மேற்கண்ட தேதிகளில் சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News October 23, 2025
திருச்சி: வங்கி வேலை.. APPLY NOW

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
திருச்சி: பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்

திருச்சி, பெட்டவாய்த்தலை மேலஆரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஹர்ஷிதா (16), விடுமுறைதினம் என்பதால் தோழிகள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளித்தபோது நீர்வரத்து அதிகரித்ததால் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 3 மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கிய மாணவி ஹர்ஷிதா நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
News October 22, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.23) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிகண்டம் ஒன்றியம் கோனார் சத்திரம், திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை, புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி, உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.