News February 28, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை

ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப்.28) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
Similar News
News March 29, 2026
திருச்சி: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<
News March 29, 2026
திருச்சி: பி.எஸ்.என்.எல் சேவை குறித்த அறிவிப்பு

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
News March 29, 2026
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <


