News August 30, 2025
திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் 149 நாட்களுக்குள், 6 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 27-ம் தேதி அன்று திருச்சி கோட்டத்தில் சரக்கு ரயில் மூலம் 6.024 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டை விட 6.4 சதவீதம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக திருச்சி ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News August 30, 2025
திருச்சி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருச்சி மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News August 30, 2025
மணப்பாறை அருகே பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி, அணியாப்பூர் அருகே வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் வரும் செப்.2 முதல் 4-ம் தேதி வரை திபெத்தியன் பார்டர் போலீஸ் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் இப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
திருச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் நாளை (ஆக.31) காலை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழிற்துறை சார்ந்த 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்துகொண்டும் அல்லது https://www.tnpeivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தும் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.