News August 16, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திருச்சி: பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கோடை காலத்தினை முன்னிட்டு, திருச்சி மாவட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் பாலிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்,
News March 5, 2026
விவசாயிகள் வேளாண் பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகள் 2025-26 ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் நவரை, உளுந்து, சோளம், எள் பயிர்களை மார்ச் 17 மற்றும் கரும்பை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு கட்டணமாக 1 ஏக்கர், நெல்லுக்கு ரூ.578, சோளத்துக்கு ரூ.234, எள்ளுக்கு ரூ.230, கரும்புக்கு ரூ.3,300ஐ, இ.சேவை மையங்கள், கூட்டுறவு, தேசிய வங்கிகளில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


