News November 5, 2025

திருச்சி: ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

image

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 60 வயதுடைய பயணி ஒருவர் சின்ன சமுத்திரம் என்ற இடத்தில் நேற்று ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து திருச்சி இருப்புப்பாதை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

திருச்சி: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

image

தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 11 பேருக்கு பணியிட மாற்றமும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 26 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நாகை மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பேபி தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதலுடன் கூடிய பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

News November 5, 2025

திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!