News September 19, 2025
திருச்சி மைய நூலகத்தில் யோகா பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர் முருகேஸ்வரி பயிற்சி அளிக்க உள்ளார். நுாலகத்தில், ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் நடந்து வந்த இப்பயிற்சி இனி சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


