News December 29, 2025

திருச்சி மைய நுாலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு டிச.29ம்தேதி (திங்கள் கிழமை) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500,ரூ.400,ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

திருச்சி: ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

image

திருச்சியில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் நாளை (ஜன.1) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் காலை 7:20 க்கு பதிலாக 7:15 க்கும், திருச்சி – திண்டுக்கல் டெமு ரயில் மாலை 6:10க்கு பதிலாக மாலை 6:05 க்கும், திருச்சி – திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 8:25 க்கு பதிலாக 8:20 க்கும் புறப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 31, 2025

திருச்சி: தவறி விழுந்து பரிதாப பலி

image

செங்கம் பகுதியை சேர்ந்தவர் பழனி (53). இவர் திருச்சி தனரத்தினம் நகரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்பெட்டாஸ் ஷீட் அமைத்தல் மற்றும் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பணியின் போது, கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்கெட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

திருச்சி: +2 மாணவி நீரில் மூழ்கி பலி

image

முசிறி அடுத்த தண்டலைப்புத்தூரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 படித்து வரும் அவர், நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் முக்கொம்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் இறங்கி குளித்த அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!