News November 4, 2025
திருச்சி: முக்கிய சாலை மூடல்

உறையூர் முதல் குடமுருட்டி கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை, உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரைப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோணக்கரை சாலை பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி சாலை வரை நாளை முதல் (நவ.5) தற்காலிகமாக மூடப்படுவதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவித்துள்ளார். SHARE NOW!
Similar News
News November 4, 2025
திருச்சி: கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருச்சி மாவட்டத்தில் 72 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக மதுரை – ஓகா இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நாளில் இருந்து 3 வது நாள் ஓகா சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
திருச்சி: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th  மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <


