News January 20, 2026
திருச்சி: மின்தடை அறிவிப்பு வாபஸ்

தொட்டியம் பகுதியில் நாளை (ஜன.21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, தொட்டியம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் கிடையாது என்றும், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
Similar News
News January 27, 2026
திருச்சி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 27, 2026
திருச்சி: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

திருச்சி வரகனேரி சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து சோமரசம்பேட்டை அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு திருச்சி GH-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார்.
News January 26, 2026
திருச்சி: சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு!

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில், பிரெயில் (BRAILLE) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடும் நிகழ்ச்சி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்றதில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அதனை வெளியிட்டார்.


