News October 20, 2025

திருச்சி: மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

image

லால்குடி அடுத்த காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளனூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை புதூர் உத்தமனூர் அருகே உயர் மின் அழுத்த பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 7, 2026

திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தம்பதியினர் முரளி(32), சினேகா(26). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், சினேகா செல்போனில் அதிகம் பயன்படுத்துவதாக கூறி, முரளி கண்டுத்துள்ளா. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முரளி அரிவாளால் சினேகாவை வெட்டியுள்ளாட். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.

News March 7, 2026

திருச்சி: மின்சாரம் தாக்கி பெண் பலி

image

திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது வீட்டில் கரூர் மாவட்டம், புத்தூர் நடுப்பட்டியை சேர்ந்த சின்னமணி(50) என்பவர், கட்டிட வேலை செய்துள்ளார். அப்போது மின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றதில், பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 7, 2026

திருச்சி: பொதுக்கூட்ட பணிகளை ஆய்வு செய்த EX.அமைச்சர்கள்

image

திருச்சியில் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் பொதுக்கூட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!