News July 4, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடியில் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி என்ற காப்பீடு நிறுவனத்தால் பயிர்க்காப்பீடு செயல்படுத்தப்படவுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News July 4, 2025
உப்பிலியபுரம்: டிரைபல் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் “சிக்கள் செல், தலசீமியா மரபணு” நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க, உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் ‘ஒரு டிரைபல் கவுன்சிலர்’ பணியிடம் ரூ.18,000 ஊதியத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
திருச்சி: விமான நிலையத்தில் மேற்கூரை விரிவாக்கம்

திருச்சி விமான நிலையத்தில் மேற்கூரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ.8.5 கோடி மதிப்பில், 9,000 சதுர மீட்டர் அளவில் மேற்கூரை விரிவாக்கம் செய்ய, இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் சமீபத்தில் அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, பணியை மேற்கொள்ள நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 மாதத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!