News December 27, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓரிகாமி பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், நாளை (டிச.,28) காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை, கிராப்ட் பேப்பர்களைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சி நடைபெற உள்ளது. அரசங்குடி அரசு உயர் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் இப்பயிற்சியை அளிக்க உள்ளார். இத்தகவலை, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
‘பாஜக-வுடன் கூட்டணி கிடையாது’ – திருச்சியில் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், ‘அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியமாகும். எந்த ஒரு அழுத்தம் கொடுத்தாலும் பாஜகவால் தங்களை கூட்டணிக்குள் இணைக்கமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு சேர அமமுகவை அழைத்து வருகிறது’ என்றார்.
News December 28, 2025
திருச்சியில் சோகம்: 4 வயது குழந்தை பலி!

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தனது 4 வயது ஆண்குழந்தையை ஸ்கூட்டி வாகனத்தின் முன்னாள் நிற்கவைத்துக் கொண்டு தாய் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் இருந்த மணல் சறுக்கியதில் குழந்தை தவறி கீழேவிழுந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் குழந்தையின் தலையின் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 28, 2025
திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


