News October 24, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் அக்.,26-ம் தேதி காலை 10:30 – 12:30 மணி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான “பேசும் சித்திரம்” என்ற தலைப்பில் “ஓவியப்பயிற்சி” நடைபெற உள்ளது. வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
திருச்சி: மத்திய சிறையில் கைதி பலி

திருச்சி மத்திய சிறைச்சாலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டு இருந்த பெரம்பலூரைச் சேர்ந்த தினேஷ் (30) என்பவர் நேற்று இரவு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. முழங்கால் அளவிலான தண்ணீரில் இறந்து கிடந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் மைய நூலகத்தில் நாளை (அக்.,25) மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இதில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர்கள் முருகேஸ்வரி, ஸ்ரீனிவாஸ் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
News October 24, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!


