News January 23, 2026

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி முகாம்

image

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் ஜன.24-ம் தேதி மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியை மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். இதில், வாசகர்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News February 18, 2026

‘திருச்சி மாநாட்டில் முக்கிய அறிவிப்பு’ – சீமான் பேட்டி

image

திருச்சியில் இன்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியது: ‘வரும் சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். படையை வழி நடத்தி செல்பவர்களும் களத்தில் தான் இருக்க வேண்டும்.எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது குறித்தும்,நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?என்பது குறித்தும் 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்’ என்றார்.

News February 18, 2026

திருச்சி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

திருச்சி: வாடகை வீடு மோசடி – காவல்துறை எச்சரிக்கை

image

திருச்சி மக்கள் நலன் கருதி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வாடகை வீடு மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும், போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் அவசர கதியில் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். வாடகை ஒப்பந்தம் இல்லாமல் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!