News November 14, 2025

திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

வெளிநாட்டில் வேலை என ஆசை வார்த்தைகள் கூறும் போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் Protector of Emigrants (POE) வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க 8939146100 என்ற எண்ணை அழைக்கலாம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 7, 2026

BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

image

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து அவர் மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்புமனு திருச்சி கிழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

திருச்சி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.32 கோடி பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஏப்.6) மாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,32,30,285 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.64,62,835 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!