News December 4, 2024
திருச்சி மாவட்ட எஸ்பி முக்கிய தகவல்

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
திருச்சி – மயிலாடுதுறை மெமு ரயில் நேரம் மாற்றம்

ஜனவரி 1-ம் தேதி முதல் பல்வேறு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:10 மணிக்கு புறப்பட்டு வந்த, திருச்சி – மயிலாடுதுறை மெமு விரைவு ரயில் வரும் ஜன.1-ம் தேதி முதல் மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு மாலை 6:50 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 24, 2025
திருச்சி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
திருச்சி: கல்லூரி மாணவி தற்கொலை

திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் தீப ரோஷினி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது தாய் வெளியே சென்று இருந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, தாய் ஜானகி அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


