News October 23, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை (அக்.,24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் பங்கேற்க உள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான அறிவிப்பு

image

தமிழகத்தில் நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் திருச்சி மாவட்ட விவசாயிகள், அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தா தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சி, மணப்பாறைம் வையம்பட்டி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 24, 25, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களை தவிர்த்து காரைக்குடி, திருச்சி சந்திப்பு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

திருச்சி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!