News October 16, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பனைமரம் வெட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். அதில், “தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். உரிய அனுமதி பெற்ற பின்னரே மரங்களை வெட்ட வேண்டும். மரங்களை வெட்டி எடுத்து செல்லும் போது தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

திருச்சி: ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST- 40, OBC-38)
6 .ஆரம்ப தேதி: 21.10.2025
7. கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

திருச்சி: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

image

திருச்சி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த திருமேணியம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஆரோக்கியசாமி என்பவர், தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து, நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமியை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!