News April 30, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

image

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

Similar News

News August 14, 2025

லால்குடி கார் விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

image

லால்குடி அருகே மாந்துறை என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கார் ஒன்று டூவீலர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாஷா, அரவிந்த், கார்த்திகேயன் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நபில் உசேன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

News August 14, 2025

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் மூன்று நாட்கள் ரத்து

image

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது வரும் 15,18, 21 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து, கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருச்சி: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட்

image

திருச்சி, பொன்மலை அருகே கடந்த ஆக.8 அன்று அஞ்சலக பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணன் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழக காவல்துறை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் காவலர் கோபாலகிருஷ்ணனை பணியிட நீக்கம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

error: Content is protected !!