News April 30, 2024
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
Similar News
News August 24, 2025
திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

திருச்சி – தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 06190-06191) வரும் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
திருச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News August 24, 2025
திருச்சி மாவட்டத்தின் வியக்க வைக்கும் பழமை

➡️ கல்லணை- 2000 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி மலைக்கோட்டை – 1500 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி நத்தர்ஷா தர்கா – 1000 ஆண்டுகள் பழமை
➡️ திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் – 1800 ஆண்டுகள் பழமை
➡️ அழகிய மணவாளப் பெருமாள் கோவில் – 1300 ஆண்டுகள் பழமை
➡️ திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
➡️ இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!