News October 19, 2025
திருச்சி மாவட்டத்தில் 58.8 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.18) இரவு மழை பெய்தது. இதில் துறையூர் சட்டமன்றத் தொகுதி தென்பறநாடு பகுதியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 58.8 மில்லி மீட்டரும், சராசரியாக 2.45 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 19, 2025
திருச்சி: தெரிந்து கொள்ள வேண்டிய அவசர உதவி எண்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்வோம். 1. மாநில உதவி எண் – 1070, 2. மாவட்ட உதவி எண்- 1077, 3. அவசர மருத்துவ உதவி – 104, 4. விபத்து உதவி எண் : 108, 5. மின்வெட்டு -94987 94987 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News October 19, 2025
திருச்சி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
திருச்சி: மாங்காய் விற்ற முதியவர் மீது மோதிய அரசு பஸ்

திருச்சி இருங்களூர் கைகாட்டியில் சாலையோரம் நேற்று மாலை மாங்காய் விற்றுக்கொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவருக்கு கால் எலும்பு முறிந்த நிலையில், அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.