News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !
Similar News
News March 3, 2026
திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சியை சேர்ந்த, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடம் இருந்து, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.


