News October 21, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News October 21, 2025
திருச்சி: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.
News October 21, 2025
திருச்சி: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

சேலத்திலிருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வந்த தனியார் பேருந்து வாத்தலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, தொடர் மழையின் காரணமாக வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
News October 21, 2025
திருச்சி: நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை செல்வதற்கு வசதியாக நெல்லையில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (அக்.22) இரவு 11:55 மணிக்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணப்பாறை, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக சென்னை சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.