News August 19, 2024

திருச்சி மாநகரில் பவர் கட் – சாலை மறியல்

image

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர், திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி, திருவானைக்காவலை அடுத்த அழகிரிபுரம் பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News March 10, 2026

திருச்சி: பயணிகள் ரயில் சேவை விரிவாக்கம்

image

திருச்சி – விருதுநகர் பயணிகள் ரயில் சேவை, வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ரயில் சேவை இயங்கும் எனவும், விரைவில் இதற்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

திருச்சி: வெளிநாட்டவரை கைது செய்த போலீசார்

image

திருச்சி விமனாநிலையத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை செல்லும் பயணிகளை குடியுரிமைப்பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது இலங்கை சேர்ந்த ராஜேஷ்கண்ணா(47) என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனையெடுத்து விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

News March 9, 2026

‘நாங்கள் மட்டுமே ஆள்வோம்’: திருச்சியில் CM அதிரடி பேச்சு!

image

‘தமிழ்நாட்டை அதிமுக முகமூடி அணிந்து காவி கும்பல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால் இந்த கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. எப்பொழுதும் மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி திமுக. எங்கள் மண்ணை நாங்கள் மட்டும் தான் ஆள்வோம். தமிழ்நாடு எப்போதும் பாஜகவுக்கு ‘Out of Control’ தான்’ என்றார் அவர்.

error: Content is protected !!