News October 13, 2025
திருச்சி: மாணவி எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி அம்பலக்காரதெரு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகள் தேவிஸ்ரீ பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் மற்றும் அவரது மனைவி நேற்று வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தேவிஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் தெப்பக்குளம் துணை தபால் நிலையத்தில், வரும் 28-ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆதார் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புதிய ஆதார் விண்ணப்பம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
திருச்சி: விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,83,115 விவசாயிகளில் 1,33,300 பேர் மட்டுமே பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 49,815 பேர் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பதிவை துரிதப்படுத்தும் வகையில் FARMER REGISTRY TN என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சிட்டா விவரங்களை தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


