News October 13, 2025
திருச்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருச்சியை சேர்ந்த 17 வயது மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த மாணவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி மாணவியை ராஜ்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்த புகாரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News October 13, 2025
திருச்சி: நகராட்சி ஊழியர் மீது கத்தியால் தாக்குதல்

துவாக்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் நகராட்சியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று துவாக்குடி பகுதியில் தேநீர் அருந்த வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் மதுபோதையில் குமாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் குமாரை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சாம்ராஜை நேற்று கைது செய்தனர்.
News October 13, 2025
திருச்சி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News October 13, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW