News October 19, 2025

திருச்சி: மாங்காய் விற்ற முதியவர் மீது மோதிய அரசு பஸ்

image

திருச்சி இருங்களூர் கைகாட்டியில் சாலையோரம் நேற்று மாலை மாங்காய் விற்றுக்கொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவருக்கு கால் எலும்பு முறிந்த நிலையில், அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

திருச்சி: காவல்துறை எச்சரிக்கை

image

டூரிஸ்ட் விசாவை (Tourist Visa) பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்கு செல்வது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் டூரிஸ்ட் விசாவை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். போலி முகவர்களால் ஏமாற்றப்படலாம். அதுமட்டுமல்லாது காவல்துறையால் கைது செய்யப்படலாம். எனவே விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 3, 2026

திருச்சி: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்பி

image

திமுக ராஜ்ய சபா எம்பி திருச்சி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மங்களூர் முதல் நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்கள் வரை, திண்டுக்கல், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, முத்துப்பேட்டை வழியாக புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

திருச்சி: கட்டிட தொழிலாளர் சங்கம் திமுகவிற்கு ஆதரவு!

image

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவரது அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர், நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

error: Content is protected !!