News October 21, 2025
திருச்சி: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.
Similar News
News January 27, 2026
திருச்சி: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.