News January 1, 2026

திருச்சி மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

திருச்சி மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. 2025-ம் ஆண்டில் திருச்சிக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

Similar News

News January 2, 2026

திருச்சி: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

திருச்சி மாநகரில் தடை: கலெக்டர் அறிவிப்பு

image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.2) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் இன்று ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

திருச்சி: வாய்க்காலில் மிதந்த பிணம்

image

காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (80). விவ–சாயி. இவர் சம்பவத்தன்று மஞ்சமேடு கிராமத்தில் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள கொங்க ஓடை வாய்க்காலில் பிச்சைமுத்து மரமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!