News August 22, 2025
திருச்சி: மக்களே உஷார்…! புதிய மோசடி

திருச்சி மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று பலர் ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News August 23, 2025
திருச்சி: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <
News August 23, 2025
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் 2 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஆக.,26-ம் தேதி தொடங்கி செப்.09 வரை நடைபெற உள்ளது. இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்த படிவம் மற்றும் ஆதார் நகலுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.