News February 25, 2026

திருச்சி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை!

image

சொத்து மோசடிகள் குறித்து திருச்சி காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. அதில் ஒரு நிலமோ அல்லது சொத்தோ வாங்கும் முன்
சொத்தின் முந்தைய உரிமையாளர் குறித்த ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கவும். வில்லங்கங்களை சொத்தின் மீதான கடன்கள், உரிமைகள், சட்ட மோதல்கள் போன்றவற்றை சரிபார்க்கவும். நில பயன்பாடு குடியிருப்பு நிலமா, வணிக பயன்பாட்டின் நிலமா, விவசாய நிலமா என்பதை சரிபார்க்க தெரிவித்துள்ளது.

Similar News

News February 26, 2026

திருச்சி மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

திருச்சி மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே <<>>க்ளிக் செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 26, 2026

பணத்தை இழக்க நேரிடும்; காவல்துறை எச்சரிக்கை!

image

சைபர் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆஃபர் என்ற பெயரில் உங்கள் Whatsapp அல்லது Telegram செயலிகளுக்கு வரும் லிங்க்(Link)-களை தொட வேண்டாம். லிங்குகளை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இழக்க நேரிடும் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க எண் 1930 அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

News February 26, 2026

திருச்சி: அக்னிபாத் திட்டத்தில் ஆள் சேர்ப்பு!

image

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு, திருச்சி, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!