News October 29, 2025
திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச இருசக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி, சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நிறுவனம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற நவ.5-ம் தேதி அகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News October 29, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (அக்.29) தா.பேட்டை ஒன்றியம் பைத்தம் பாறை பகுதியிலும், மருங்காபுரி ஒன்றியம் செவல்பட்டி பகுதியிலும், மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும் பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் துறையூர் நகராட்சி பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
திருச்சி: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


