News January 13, 2025
திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொது மக்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க சேவை மையத்தை இன்று மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை 89391 – 46100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம். இந்த நிகழ்வில் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
திருச்சி: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News December 11, 2025
திருச்சியில் டிடிவி தினகரன் போட்டி?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட இருப்பதற்கான விருப்ப மனுவை, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சி தலைமையிடம் நேற்று வழங்கினார்.
News December 11, 2025
திருச்சி: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், திருச்சியில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் மூன்று சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள், சிறந்த வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது. விருதுக்கான விண்ணப்பங்களை ஆட்சியரக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஜன.15க்குள் ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


