News March 23, 2025

திருச்சி: மக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சர்

image

திருச்சி நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று மார்ச் 22, நடைபெற்றது. அந்த வகையில் பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Similar News

News September 23, 2025

திருச்சி: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் செப்.,26-ம் தேதி, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News September 23, 2025

திருச்சி: விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

image

விவசாயிகள் தரமான விதைகளை பயிரிடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். விதை தரமானதாக இல்லையெனில் மகசூல் இழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க விவசாயிகள் நடவு செய்வதற்கு முன்பு விதைகளை பரிசோதனை செய்வது அவசியம். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை பரிசோதனை நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

திருச்சியில் டெங்கு பாதிப்பு இல்லை

image

திருச்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!