News October 31, 2025
திருச்சி: மகளை சீரழித்த கொடூர தந்தை கைது

துவாக்குடியைச் சேர்ந்தவர் விஸ்வா (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில மாதங்களளாக மனைவியை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை இவர் மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் விஸ்வாவை போக்சோவின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 31, 2025
திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
திருச்சி: நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நபார்டு வங்கி நிதி சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆபிஸர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் வரும் நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <


