News January 11, 2026
திருச்சி: பொங்கல் பரிசால் பறிபோன உயிர்

கருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அருள் ஜெனிபர். பழ வியாபாரியான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் நேற்று தகராறு ஏற்பட்டடுள்ளது. இதில் மனமுடைந்த அருள் ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
திருச்சி: துன்பங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் எல்லா நாட்களும் திருவிழா நாட்களே!. இங்கு தினந்தோறும் ஆயிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் வழிபட்டால் இதுவரை இருந்த தடைகள், சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
திருச்சியில் திமுக மாநில மாநாடு- அறிவிப்பு

திருச்சியில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடத்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாடு “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
திருச்சி: மின் பிரச்சனையா? இதோ தீர்வு

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


