News January 7, 2026
திருச்சி: பொங்கல் கலை விழா நிகழ்சிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில், தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் குறித்த பணிகள் மேற்கொள்வதற்கும், மேலும் விபரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் சிவஞானவதியை (எண்:9486152007) தொடர்பு கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடலாம் எனவும் ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
திருச்சி: பிரதமர் ஓய்வூதிய திட்டத்தில் இணைய அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி மாவட்டத்திற்க்கு விருது – மற்றுமொரு பெருமை!

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக, திருச்சி மாவட்டத்திற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.


