News September 28, 2025
திருச்சி: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதவத்தூர், சோமரசம்பேட்டை, குழுமணி, மருவத்தூர், நரசிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம், செங்கட்டுப்பட்டி, உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 4, 2026
திருச்சி: கொலை குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனக்கால் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரகுமார் என்பவரை கமலேஷ் என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் கமலேஷை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் கமலேசின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News February 4, 2026
திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (33). இவர் நேற்று மேலவாளாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் சேகர் (50) என்பவரை கைது செய்தனர்.


