News October 4, 2025
திருச்சி: பூ பறிக்க சென்ற சிறுவன் மாயம்

திருச்சி, சாத்தனூரை 15 வயதுடைய சிறுவன் நேற்று மாலை அருகில் உள்ள காட்டு பகுதியில் ஆவாரம் பூ பறித்து வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் சிறுவன் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.
Similar News
News April 8, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
News April 8, 2026
திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
திருச்சியில் உள்ள அதிசய கிணறு!

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த தகவல் தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


