News January 20, 2026
திருச்சி: பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சி

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து துரித உணவுகள் தயாரித்தல் குறித்து 12 நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
திருச்சி: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News January 26, 2026
திருச்சி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருச்சி மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
திருச்சி அருகே விபத்து: தடுப்புச் சுவரில் மோதி விவசாயி பலி

துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மலையாளி (53) என்பவர் எதிர்பாராத விதமாக சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


