News February 25, 2026
திருச்சி – பாலக்காடு ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு செல்லும், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் பிப்.27ஆம் தேதி மட்டும், வழக்கமான வழித்தடமான பீளமேடு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை ரயில் நிலையங்களை தவிர்த்து போதனூர், இருகூர் வழியாக இயக்கப்படும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Similar News
News February 26, 2026
திருச்சி: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
திருச்சி மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

திருச்சி மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News February 26, 2026
பணத்தை இழக்க நேரிடும்; காவல்துறை எச்சரிக்கை!

சைபர் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆஃபர் என்ற பெயரில் உங்கள் Whatsapp அல்லது Telegram செயலிகளுக்கு வரும் லிங்க்(Link)-களை தொட வேண்டாம். லிங்குகளை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இழக்க நேரிடும் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க எண் 1930 அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


