News November 19, 2025

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

திருச்சி: பிரதமர் வருகை – ட்ரோன்கள் பறக்க தடை

image

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி அன்றைய தினம் முழுவதும், திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

திருச்சி: பயணிகள் ரயில் சேவை விரிவாக்கம்

image

திருச்சி – விருதுநகர் பயணிகள் ரயில் சேவை, வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ரயில் சேவை இயங்கும் எனவும், விரைவில் இதற்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

திருச்சி: வெளிநாட்டவரை கைது செய்த போலீசார்

image

திருச்சி விமனாநிலையத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை செல்லும் பயணிகளை குடியுரிமைப்பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது இலங்கை சேர்ந்த ராஜேஷ்கண்ணா(47) என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனையெடுத்து விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!