News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 16, 2026
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 16, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 723 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பென்சன் நிலுவை தொகை, நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை, மருத்துவம் மற்றும் இதர பணி தொடர்பான மனுக்கள் என 723 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


