News March 29, 2024
திருச்சி பயணிகளுக்கு அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்ட மேலாளர் அலுவலகம் மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரயில் நிலையங்களில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது பயணிகளுக்கு உண்டாகும் பாதுகாப்பு குறைபாடு, ரயில் நிலையத்தின் மீது புகார் அளிக்க, மருத்துவ உதவி தேவைக்கும், ரயில் தாமதம் குறித்து ரயில் மீது கம்ப்ளைன்ட் என அனைத்து பிரச்சனைகளுக்கும் 139 எண்ணை அழைத்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். மேலும் விண்ணப்ப படிவங்களை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மே 3ம் தேதிக்குள் விளையாட்டு ஆணைய இணையத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. SHARE செய்ங்க
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
News April 19, 2025
சோமரசம்பேட்டையில் கபடி போட்டிக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கபடி போட்டி வரும் மே.3, 4 ஆகிய தேதிகளில் சோமரசம்பேட்டையில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.50,000, 2-ம் பரிசு ₹.30,000, 3-ம் பரிசு ₹.25,000, 4-ம் பரிசு ₹.25,000 வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.