News January 28, 2026

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

திருச்சி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 2, 2026

திருச்சி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 2, 2026

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் அதவத்தூர், சிறுகனூர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வாசன் நகர், குழுமணி, வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர், போதாவூர், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், வாழையூர், குமுளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திருச்சி: சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி பலி

image

திருச்சி, துவாக்குடி பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (59) – லட்சுமி (55). இவர்கள் இருவரும் நேற்று துவாக்குடி செல்வதற்காக பெல் நகர் பகுதியில் இருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் திரும்பிய போது வேதாரண்யத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!