News October 20, 2025
திருச்சி: நூலிழையில் உயிர் தப்பிய நபர்

திருச்சி மாநகரில் இயக்கப்படும் தனியார் டவுன் பேருந்துகள், நகர் பகுதியில் அதிவேகமாக செல்லும் காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காந்தி மார்கெட்டில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று காஜாமொய்தீன் வீதி சந்திப்பு பகுதியில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர் நூலிழையில் உயிர்தப்பினார்.
Similar News
News October 20, 2025
திருச்சி: மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

லால்குடி அடுத்த காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளனூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை புதூர் உத்தமனூர் அருகே உயர் மின் அழுத்த பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 20, 2025
திருச்சி: ரயிலில் பட்டாசு எடுத்து வந்த நபர் கைது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசுகள் எடுத்து செல்லப்படுகிறதா என ரயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று நடத்திய சோதனையில், பட்டாசுகளை மறைத்து எடுத்து வந்த ஒரு நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News October 20, 2025
திருச்சி: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்
1. திருச்சி – 0431-2462101
2. ஸ்ரீ ரங்கம் – 0431-2432300
3. லால்குடி – 0431-2542101
4. மணப்பாறை – 04332-260501
5. திருவெறும்பூர் – 0431-2902002
6. சமயபுரம் – 0431-2670373
7. துறையூர் – 04327-222401
8. முசிறி – 04326-26029
9. வையம்பட்டி – 04332-272101
10. புள்ளம்பாடி – 04329-241380
11. துவரங்குறிச்சி – 04332-254101
12. உப்பிலியபுரம் – 04327-252101