News October 31, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த வேன் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவரை, முன்விரோதம் காரணமாக முத்துப்பாண்டி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டவே, குற்றவாளி முத்துபாண்டிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்,
Similar News
News October 31, 2025
திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 31, 2025
திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
திருச்சி: நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நபார்டு வங்கி நிதி சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆபிஸர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் வரும் நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


