News June 5, 2024
திருச்சி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 29, 2025
திருச்சி: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

➡️ ஸ்ரீ ரங்கம்- ஆதி திருவரங்கம்
➡️ திருச்சி – திருசிரபுரம்
➡️ தொட்டியம் – கௌத்த ராஜநல்லூர்
➡️ துறையூர் – தீர்த்தபுரி
➡️ திருவெறும்பூர் – திருஎறும்பூர்
➡️ உறையூர்- உறந்தை / கோழியூர்
➡️ சமயபுரம் – மாகாளிபுரம்
➡️ லால்குடி – திருத்தவத்துறை
➡️இந்த அரிய தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 29, 2025
திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அறிக்கை

திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி விதை பரிசோதனை நிலையத்தில் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.