News April 8, 2025
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இலவச நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளர்ப்பு உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும் என மைய தலைவர் ஷிபாதாமஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
திருச்சி: புனித வெள்ளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
News April 17, 2025
திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News April 17, 2025
திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.