News October 27, 2025
திருச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மணப்பாறை, பொன்.முச்சந்தி அடுத்த மேட்டுக்கடையில் நேற்று இரவு சீத்தப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ணையார்குளத்துப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பால்ராஜ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி, மணப்பாறை GHக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
திருச்சி வழி மைசூர் ரயில் ரத்து

பயணிகள் வருகை குறைவு காரணமாக திருச்சி வழியாக இயக்கப்பட்டு வந்த மைசூர் – காரைக்குடி ரயில் சில நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைசூர் – காரைக்குடி விழாக்கால சிறப்பு ரயிலானது வரும் 30 மற்றும் நவ. 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
திருச்சி: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 26, 2025
திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் இன்று ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள், வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாச வேலைகளை தடுக்கும் வகையிலும், போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


